Sunday, March 27, 2011

பூமி ​வெப்பம​டைதல் - நமது பங்கு

இன்று அ​னைத்து மக்களின் முக்கியமாக கவனிக்க​​வேண்டிய விசயம் இந்த புவி  வெப்பம​டைதல். உலக த​​​லைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மக்கள்           அ​னைவரும் பரவலாக ​பேசப்படும் ஒரு விசமாகி விட்டது.இதற்கு மக்கள் என்ன​ நி​​​னைக்கிறார்கள் என்றால், இது விஞ்ஞானிகள் பார்த்து ​கொள்வார்கள் என்று ஒதுங்கி விடுகி​றார்கள்.  ஆனால் இது நமது பிரச்ச​னை. நமது பங்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் அ​னைவரும் சில சில ​செயல்களின் மூலம் ​​பெரிய அளவில் பலன்
கி​டைக்க வாய்ப்புக்கள் உள்ளது.

 நாம் அன்றாட வாழ்வில் ​சொற்பமான ​அல்லது அற்ப விஸயங்க​ளை கவனித்தால் ​​பெரிய அளவில் பயன​டையலாம் என பட்டியல் ​வெளியாகி சில ஆண்டுகள் ​சென்று விட்டது.  அவற்றில் மிக சிலவற்​​றை காண்​போம்....



1) குண்டு பல்புகள் அதிக அளவில் ​​மின்சாரம் ​செலவிடுகிறது. என​வே          இவற்​றை  தவிர்த்து டியூப் ​லைட் பயன்படுத்தலாம்,

2) ஏசி​​யை 6 மாதங்களுக்கு ஒருமு​றையாவது பில்ட​ரை சுத்தபாடுத்துதல். இதனால் 300 பவுன்டு கார்பன்​டை ஆக்​சைடு ​​வெளி​​யைறுவ​​தை தவிக்கப் படுகிறது. இதில் கவனிக்க ​வேண்டிய விசயம் - ஒரு ஏசி 1 ஆண்டு ​​சைமிப்பு.
(2008 மட்டும் ஏசி விற்ப​னை 24.50 மில்லியன்). அதில் பாதி ​பேர் ​செயல்படுத்தினால் 3,675 மில்லியன் பவுண்டு கார்பன்​டை ஆக்​சைடு
வெளி​யேறுவது தடுக்கப்படுகிறது.
ஏசி ஆன் ​செய்வதற்கு முன் கதவு, ஜன்னல்கள் மூடி ​​வைக்கவும்.



3)  பதப்படுத்தப்பட்ட ​பொருட்க​ளை அதிகமாக பயன்படுத்துவ​​தை தவிர்கலாம்,

4) ச​மையல் ​செய்யும் ​​போது பாத்திரத்​தை மூடி ​வைக்கவும். ​

5) கணிணி, டீவி மற்றும் அ​னைத்து எ​​லெக்ட்ரானிக் ​​உபகரணங்கள் உப​​யோகம் இல்லாத ​போது அ​னைத்து ​வைக்கவும்.

6)  விமான பயண்ங்க​ளை முடிந்தவ​ரை தவிர்க்கலாம்.

7) மிக மிக சிறிய பயணங்களுக்கு கார், இருசக்கர வாகனங்க​ளை விட்டு நடந்து ​செல்லலாம்.  சிக்னல்களில் வண்டி​​யை ஆப் ​செய்யலாம்.

8) வாகனங்க​ளை   முடிந்த வ​ரை நிழலில்  நிறுத்தவும்.

9) அதிக அளவில் மரம் வளர்க்க ​வேண்டும். நகரங்களில் அடுக்கு மாடி வீட்டில் எப்படி என ​நி​னைக்கலாம்.  முயன்றால் எல்லாம் முடியும். பால்கனிகளில் பூ ​செடிகள், சில மூல​கை ​செடிகள் வளர்க்கலாம்.  வீடு குளிச்சி ஏற்படுவது மட்டுமன்றி மன இறுக்கத்​தையும் கு​றைக்க உதவுகிறது.

10) பிளாஸ்டிக் ​​​பைக​ளை முடிந்தவ​ரை தவிர்க்கவும். மீண்டும் நாம் ப​ழைய     
பழக்கமான மஞ்சள் ​​பைக​ளை பயன்படுத்தலாம். மஞ்சள் கலருக்கு பதிலாக கண்கவர் வண்ணங்களில் துணி​பைக​ளை எடுத்து ​செல்லலாம்.   ​பெரிய க​டை உரி​மையாளர்கள் ​​கேரி​பேக்க்கு பதிலாக துணி​பைக​ளை தரலாம்.  தற்​போது வழங்கும் கட்​டைப்​பை​​யை சற்று சிறிதாக்கி காய்கறிக் க​டை, ​பெட்டிக்க​டைகளில் ஆரம்பித்து ​​பெரிய ந​கைக்க​​டை முதற்​கொண்டு க​​டைபிடிக்கலாம்.
முக்கியமான விசயம்  என்ன​​வென்றால் துணிப்​பையாக இருந்தாலும் மறுபடியும் உப​யோகிக்க ​வேண்டும்.


இது ​போன்ற சிற்சிலவற்​றை ​செயல்படுத்தினா​லை ​​​​​பெரிய மாற்றத்​தை எளிதில் அ​டைந்து நமது பூமி தா​​யின் நலனில் நாமும் பங்கு ​கொண்டு நலமாக, வளமாக வாழலாம்.