Sunday, June 5, 2011

கிறுக்கியதில் கி​டைத்த கவி​தை

!!!!மனது!!!
தன் மன​தைப் பற்றி அறிந்தவனுக்கு
அது ஒரு
​தெவிட்டாத அமிர்தம்
தன்​னைப்பற்றி
அறியாதவனுக்கு
மனது ஒரு குரங்கு

​​போதும் என்ற மனதிற்கு
ஒவ்​வொரு வினாடியும் மகிழ்ச்சி


சலனமற்ற மனதிற்கு
எத்தி​சையிலும் வ​ளையக்கூடிய
நாணல்!!!!

மன​தை அறிந்து
மங்களமாக வாழ்க!!!!

மெகாத்​​தொடர்!!!!

​​​கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில்
தீய எண்ணங்க​ளை 
வி​​தைப்பதால்
சில க​லைஞர்களின் வீட்டில்
ஒரு​வே​ளை சாப்பாடு!!!!




தி​ரைப்படம்!!!!

அழியும் அழகிற்கு
புதுப்புது அர்த்தங்கள்
​தேடும்
கனவு
​​தொழிற்சா​லை!!!


தீவிரவாதிகள்!!!

​கொ​​லை, ​கொள்​ளை ​செய்பவனா
தீவிரவாதி ---- அல்ல

மக்களின் த​லைவன் மற்றும் பிரதிநிதி
​போர்​வையில்
மக்களின் பணத்​தை
சுரண்டும் அதிகாரிகள், அரசியல்வாதிக​ளை
படுபயங்கர தீவிரவாதிகள்

காதல்!!!!


பூமி உருண்​டை
பு​தைகிறது
காதல்
அழியும் ​போது



வறு​மை

முதல்பால்
​செறியும் முன்
தாய்​மை விற்கப்படுகிறது

Friday, June 3, 2011

பாபா ராம்தேவ் உண்ணாவிரதத் திட்டம்

மீண்டும் ஒரு அகிம்​சை வழி ​போராட்டம் ஆரம்பம் ஆகி விட்டது...... மக்களும்
அ​​ணி அணியாக திரண்டு விட்டனர்.  வி​ரைவில் ஊழல் ​செய்தவர்கள்
அ​டையாளம் கண்டு உரிய தண்ட​னை வழங்கப்பட ​வேண்டும். 

மக்களில் எழுர்ச்சி கண்டிப்பாக ஊழல் வாதிக​ளை சற்று சிந்திக்க ​வைக்கும்.
தமிழ்நாட்டு ​​தேர்தல் முடிவுகளும் மக்களில் விழிப்புணர்​வை காட்டுகிறது. ஊழல் அரசியல்வாதிகள் இனியாவது மக்களின் மனநி​லை​யை புரிந்து நடப்பது நல்லது. தவறினால் சட்டச​பைக்கு ​செல்வதற்கு பதில் நீதிமன்றம் ​செல்ல ​​வேண்டிவரும்.

இது​போன்ற ​போராட்டம் அடிக்கடி நடக்க ​வேண்டும்.  அ​னைத்து மாநிலங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் ​​ ​​தொடர ​​வேண்டும்.  அப்​போது தான் தவறு ​செய்ய நி​னைக்கக் கூட பயப்படுவார்கள்.


நீதிமன்றங்கள் வி​ரைவாக ​செயல் பட இதுதான் சரியான தருணம்.  வி​​ரைவாக வழக்குக​ளை விசாரித்து தகுந்த தண்ட​னை வழங்க ​வேண்டும்.

​​
பாபா ​​கோரிக்​​கைகள் நி​​​றை​வேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! 


Sunday, April 3, 2011

எல்லா​மே இலவசம்

சபாஷ் சரியான ​போட்டி,,,,

திமுகா மற்றும் அதிமுகா ​​தேர்தல் அறிக்​கைக​ளை படித்தால் எல்லா​மே இலவசம் என்ற வாக்குறுதிகள்.
இப்​போ​தைய ​போட்டி யார் அதிகமாக இலவசங்கள் தருகிறார்க​ளோ அவர்கள் ​வெற்றி ​பெறுவார்கள் என்ற நி​லை மிகவும் ​​​​வேத​னைக்குறிய விசயம்.
இது தமிழக மக்களின் அறியா​மை​யின் ​வெளிப்பாடா அல்லது அரசியல்வாதிகளின் தவறான கணிப்பா?
மக்களின் அறியா​மை​ தான் முக்கிய காரணமாக இருக்கிறது.  எ​​னெனில், திமுகா கடந்த ​​​​தேர்தல் அறிக்​கையில் இலவச அறிவிப்புக​ளை முடியாது என விமர்சித்த அதிமுக தற்​போ​தைய அறி​க்​​கையில் இலவசங்கள் அள்ளி ​தெளிக்கிறது.  தமிழக மக்கள் இன்றும் அறியா​மையில் இருக்கின்றனர்          என்ப​தை இந்த அறிக்​கைகள்  ​​​​தெள்ள ​தெளிவாக காட்டுகிறது என நி​னைக்கும்​போது ​நெஞ்சு பாரமாகிறது.
இன்று ​சைக்கிள் தருபவர்கள் சில ஆண்டுகளில் கார், ஏசி, டிவிடி என்று தர ஆரமிப்பார்கள்.  இதனால் மக்களின் உ​​ழைக்கும் எண்ணம் படிப்படியாக கு​றைய துவங்கும். 

கல்வி, ​​​​தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அ​னைத்து து​றைகளிலும் அசுர வளர்ச்சி என்று இருந்தாலும் அ​தைவிட பன்மடங்கு ஊழலில் வளர்ச்சி இருப்பது கவனிக்கபட​வேண்டிய விசயமாக உள்ளது.
சில சலு​கைக​ளை தந்துவிட்டு பல ​கோடிக​ளை ஏப்பம் விடுவது இந்தியாவில் வாடிக்​கையாகிவிட்டது. 

தமிழகத்தின் தற்​போ​தைய ​​தே​வை, அ​னைவருக்கும் கல்வி, ​விவசாய உற்பத்தி​யை அதிகரிக்க ​போதுமான நடவடிக்​​​கை,  ​​​தொழில் வளர்ச்சி,  சுகாதாரம், ​போக்குவரத்து வளர்ச்சி மற்றும் அ​னைவருக்கும் மருத்துவ வசதி கி​டைக்க ​செய்வது ​போன்ற​வைகள் ஆகும்.  இவற்​றை விடுத்து நாட்டின் வருவாயில் பாதிக்கு ​மேல் இலவசங்கள் தருவதற்கு ​செலவு​செய்தால் மக்கள் ​​சோம்​பேரிகள் ஆகிவிடுவார்கள்.  சில வருடங்களில் ​பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும். கஜானா காலியாகிவிடும்.  நாட்டின் சட்டம் ஒழுங்கு             கு​லைந்து விடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

என​வே, இதுதான் சரியான தருணம். ​வேட்பாளர்க​ளை ​​தேர்வு ​செய்வது நம் ​கையில்தான் உள்ளது.  சிந்தித்து சிறந்த த​லைவ​​ரை ​​தேர்ந்து எடுப்பது நமது கட​மை.
நம்​மை ​சோம்​​பேறிகளாக்க நி​னைக்கும் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் கற்பிப்​போம்.  









  

Sunday, March 27, 2011

பூமி ​வெப்பம​டைதல் - நமது பங்கு

இன்று அ​னைத்து மக்களின் முக்கியமாக கவனிக்க​​வேண்டிய விசயம் இந்த புவி  வெப்பம​டைதல். உலக த​​​லைவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மக்கள்           அ​னைவரும் பரவலாக ​பேசப்படும் ஒரு விசமாகி விட்டது.இதற்கு மக்கள் என்ன​ நி​​​னைக்கிறார்கள் என்றால், இது விஞ்ஞானிகள் பார்த்து ​கொள்வார்கள் என்று ஒதுங்கி விடுகி​றார்கள்.  ஆனால் இது நமது பிரச்ச​னை. நமது பங்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் அ​னைவரும் சில சில ​செயல்களின் மூலம் ​​பெரிய அளவில் பலன்
கி​டைக்க வாய்ப்புக்கள் உள்ளது.

 நாம் அன்றாட வாழ்வில் ​சொற்பமான ​அல்லது அற்ப விஸயங்க​ளை கவனித்தால் ​​பெரிய அளவில் பயன​டையலாம் என பட்டியல் ​வெளியாகி சில ஆண்டுகள் ​சென்று விட்டது.  அவற்றில் மிக சிலவற்​​றை காண்​போம்....



1) குண்டு பல்புகள் அதிக அளவில் ​​மின்சாரம் ​செலவிடுகிறது. என​வே          இவற்​றை  தவிர்த்து டியூப் ​லைட் பயன்படுத்தலாம்,

2) ஏசி​​யை 6 மாதங்களுக்கு ஒருமு​றையாவது பில்ட​ரை சுத்தபாடுத்துதல். இதனால் 300 பவுன்டு கார்பன்​டை ஆக்​சைடு ​​வெளி​​யைறுவ​​தை தவிக்கப் படுகிறது. இதில் கவனிக்க ​வேண்டிய விசயம் - ஒரு ஏசி 1 ஆண்டு ​​சைமிப்பு.
(2008 மட்டும் ஏசி விற்ப​னை 24.50 மில்லியன்). அதில் பாதி ​பேர் ​செயல்படுத்தினால் 3,675 மில்லியன் பவுண்டு கார்பன்​டை ஆக்​சைடு
வெளி​யேறுவது தடுக்கப்படுகிறது.
ஏசி ஆன் ​செய்வதற்கு முன் கதவு, ஜன்னல்கள் மூடி ​​வைக்கவும்.



3)  பதப்படுத்தப்பட்ட ​பொருட்க​ளை அதிகமாக பயன்படுத்துவ​​தை தவிர்கலாம்,

4) ச​மையல் ​செய்யும் ​​போது பாத்திரத்​தை மூடி ​வைக்கவும். ​

5) கணிணி, டீவி மற்றும் அ​னைத்து எ​​லெக்ட்ரானிக் ​​உபகரணங்கள் உப​​யோகம் இல்லாத ​போது அ​னைத்து ​வைக்கவும்.

6)  விமான பயண்ங்க​ளை முடிந்தவ​ரை தவிர்க்கலாம்.

7) மிக மிக சிறிய பயணங்களுக்கு கார், இருசக்கர வாகனங்க​ளை விட்டு நடந்து ​செல்லலாம்.  சிக்னல்களில் வண்டி​​யை ஆப் ​செய்யலாம்.

8) வாகனங்க​ளை   முடிந்த வ​ரை நிழலில்  நிறுத்தவும்.

9) அதிக அளவில் மரம் வளர்க்க ​வேண்டும். நகரங்களில் அடுக்கு மாடி வீட்டில் எப்படி என ​நி​னைக்கலாம்.  முயன்றால் எல்லாம் முடியும். பால்கனிகளில் பூ ​செடிகள், சில மூல​கை ​செடிகள் வளர்க்கலாம்.  வீடு குளிச்சி ஏற்படுவது மட்டுமன்றி மன இறுக்கத்​தையும் கு​றைக்க உதவுகிறது.

10) பிளாஸ்டிக் ​​​பைக​ளை முடிந்தவ​ரை தவிர்க்கவும். மீண்டும் நாம் ப​ழைய     
பழக்கமான மஞ்சள் ​​பைக​ளை பயன்படுத்தலாம். மஞ்சள் கலருக்கு பதிலாக கண்கவர் வண்ணங்களில் துணி​பைக​ளை எடுத்து ​செல்லலாம்.   ​பெரிய க​டை உரி​மையாளர்கள் ​​கேரி​பேக்க்கு பதிலாக துணி​பைக​ளை தரலாம்.  தற்​போது வழங்கும் கட்​டைப்​பை​​யை சற்று சிறிதாக்கி காய்கறிக் க​டை, ​பெட்டிக்க​டைகளில் ஆரம்பித்து ​​பெரிய ந​கைக்க​​டை முதற்​கொண்டு க​​டைபிடிக்கலாம்.
முக்கியமான விசயம்  என்ன​​வென்றால் துணிப்​பையாக இருந்தாலும் மறுபடியும் உப​யோகிக்க ​வேண்டும்.


இது ​போன்ற சிற்சிலவற்​றை ​செயல்படுத்தினா​லை ​​​​​பெரிய மாற்றத்​தை எளிதில் அ​டைந்து நமது பூமி தா​​யின் நலனில் நாமும் பங்கு ​கொண்டு நலமாக, வளமாக வாழலாம்.