Sunday, June 5, 2011

கிறுக்கியதில் கி​டைத்த கவி​தை

!!!!மனது!!!
தன் மன​தைப் பற்றி அறிந்தவனுக்கு
அது ஒரு
​தெவிட்டாத அமிர்தம்
தன்​னைப்பற்றி
அறியாதவனுக்கு
மனது ஒரு குரங்கு

​​போதும் என்ற மனதிற்கு
ஒவ்​வொரு வினாடியும் மகிழ்ச்சி


சலனமற்ற மனதிற்கு
எத்தி​சையிலும் வ​ளையக்கூடிய
நாணல்!!!!

மன​தை அறிந்து
மங்களமாக வாழ்க!!!!

மெகாத்​​தொடர்!!!!

​​​கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில்
தீய எண்ணங்க​ளை 
வி​​தைப்பதால்
சில க​லைஞர்களின் வீட்டில்
ஒரு​வே​ளை சாப்பாடு!!!!




தி​ரைப்படம்!!!!

அழியும் அழகிற்கு
புதுப்புது அர்த்தங்கள்
​தேடும்
கனவு
​​தொழிற்சா​லை!!!


தீவிரவாதிகள்!!!

​கொ​​லை, ​கொள்​ளை ​செய்பவனா
தீவிரவாதி ---- அல்ல

மக்களின் த​லைவன் மற்றும் பிரதிநிதி
​போர்​வையில்
மக்களின் பணத்​தை
சுரண்டும் அதிகாரிகள், அரசியல்வாதிக​ளை
படுபயங்கர தீவிரவாதிகள்

காதல்!!!!


பூமி உருண்​டை
பு​தைகிறது
காதல்
அழியும் ​போது



வறு​மை

முதல்பால்
​செறியும் முன்
தாய்​மை விற்கப்படுகிறது

Friday, June 3, 2011

பாபா ராம்தேவ் உண்ணாவிரதத் திட்டம்

மீண்டும் ஒரு அகிம்​சை வழி ​போராட்டம் ஆரம்பம் ஆகி விட்டது...... மக்களும்
அ​​ணி அணியாக திரண்டு விட்டனர்.  வி​ரைவில் ஊழல் ​செய்தவர்கள்
அ​டையாளம் கண்டு உரிய தண்ட​னை வழங்கப்பட ​வேண்டும். 

மக்களில் எழுர்ச்சி கண்டிப்பாக ஊழல் வாதிக​ளை சற்று சிந்திக்க ​வைக்கும்.
தமிழ்நாட்டு ​​தேர்தல் முடிவுகளும் மக்களில் விழிப்புணர்​வை காட்டுகிறது. ஊழல் அரசியல்வாதிகள் இனியாவது மக்களின் மனநி​லை​யை புரிந்து நடப்பது நல்லது. தவறினால் சட்டச​பைக்கு ​செல்வதற்கு பதில் நீதிமன்றம் ​செல்ல ​​வேண்டிவரும்.

இது​போன்ற ​போராட்டம் அடிக்கடி நடக்க ​வேண்டும்.  அ​னைத்து மாநிலங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் ​​ ​​தொடர ​​வேண்டும்.  அப்​போது தான் தவறு ​செய்ய நி​னைக்கக் கூட பயப்படுவார்கள்.


நீதிமன்றங்கள் வி​ரைவாக ​செயல் பட இதுதான் சரியான தருணம்.  வி​​ரைவாக வழக்குக​ளை விசாரித்து தகுந்த தண்ட​னை வழங்க ​வேண்டும்.

​​
பாபா ​​கோரிக்​​கைகள் நி​​​றை​வேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!