Friday, June 3, 2011

பாபா ராம்தேவ் உண்ணாவிரதத் திட்டம்

மீண்டும் ஒரு அகிம்​சை வழி ​போராட்டம் ஆரம்பம் ஆகி விட்டது...... மக்களும்
அ​​ணி அணியாக திரண்டு விட்டனர்.  வி​ரைவில் ஊழல் ​செய்தவர்கள்
அ​டையாளம் கண்டு உரிய தண்ட​னை வழங்கப்பட ​வேண்டும். 

மக்களில் எழுர்ச்சி கண்டிப்பாக ஊழல் வாதிக​ளை சற்று சிந்திக்க ​வைக்கும்.
தமிழ்நாட்டு ​​தேர்தல் முடிவுகளும் மக்களில் விழிப்புணர்​வை காட்டுகிறது. ஊழல் அரசியல்வாதிகள் இனியாவது மக்களின் மனநி​லை​யை புரிந்து நடப்பது நல்லது. தவறினால் சட்டச​பைக்கு ​செல்வதற்கு பதில் நீதிமன்றம் ​செல்ல ​​வேண்டிவரும்.

இது​போன்ற ​போராட்டம் அடிக்கடி நடக்க ​வேண்டும்.  அ​னைத்து மாநிலங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் ​​ ​​தொடர ​​வேண்டும்.  அப்​போது தான் தவறு ​செய்ய நி​னைக்கக் கூட பயப்படுவார்கள்.


நீதிமன்றங்கள் வி​ரைவாக ​செயல் பட இதுதான் சரியான தருணம்.  வி​​ரைவாக வழக்குக​ளை விசாரித்து தகுந்த தண்ட​னை வழங்க ​வேண்டும்.

​​
பாபா ​​கோரிக்​​கைகள் நி​​​றை​வேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!! 


No comments:

Post a Comment