சபாஷ் சரியான போட்டி,,,,
திமுகா மற்றும் அதிமுகா தேர்தல் அறிக்கைகளை படித்தால் எல்லாமே இலவசம் என்ற வாக்குறுதிகள்.
இப்போதைய போட்டி யார் அதிகமாக இலவசங்கள் தருகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நிலை மிகவும் வேதனைக்குறிய விசயம்.
இது தமிழக மக்களின் அறியாமையின் வெளிப்பாடா அல்லது அரசியல்வாதிகளின் தவறான கணிப்பா?
மக்களின் அறியாமை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. எனெனில், திமுகா கடந்த தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை முடியாது என விமர்சித்த அதிமுக தற்போதைய அறிக்கையில் இலவசங்கள் அள்ளி தெளிக்கிறது. தமிழக மக்கள் இன்றும் அறியாமையில் இருக்கின்றனர் என்பதை இந்த அறிக்கைகள் தெள்ள தெளிவாக காட்டுகிறது என நினைக்கும்போது நெஞ்சு பாரமாகிறது.
இன்று சைக்கிள் தருபவர்கள் சில ஆண்டுகளில் கார், ஏசி, டிவிடி என்று தர ஆரமிப்பார்கள். இதனால் மக்களின் உழைக்கும் எண்ணம் படிப்படியாக குறைய துவங்கும்.
கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அனைத்து துறைகளிலும் அசுர வளர்ச்சி என்று இருந்தாலும் அதைவிட பன்மடங்கு ஊழலில் வளர்ச்சி இருப்பது கவனிக்கபடவேண்டிய விசயமாக உள்ளது.
சில சலுகைகளை தந்துவிட்டு பல கோடிகளை ஏப்பம் விடுவது இந்தியாவில் வாடிக்கையாகிவிட்டது.
தமிழகத்தின் தற்போதைய தேவை, அனைவருக்கும் கல்வி, விவசாய உற்பத்தியை அதிகரிக்க போதுமான நடவடிக்கை, தொழில் வளர்ச்சி, சுகாதாரம், போக்குவரத்து வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க செய்வது போன்றவைகள் ஆகும். இவற்றை விடுத்து நாட்டின் வருவாயில் பாதிக்கு மேல் இலவசங்கள் தருவதற்கு செலவுசெய்தால் மக்கள் சோம்பேரிகள் ஆகிவிடுவார்கள். சில வருடங்களில் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும். கஜானா காலியாகிவிடும். நாட்டின் சட்டம் ஒழுங்கு குலைந்து விடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
எனவே, இதுதான் சரியான தருணம். வேட்பாளர்களை தேர்வு செய்வது நம் கையில்தான் உள்ளது. சிந்தித்து சிறந்த தலைவரை தேர்ந்து எடுப்பது நமது கடமை.
நம்மை சோம்பேறிகளாக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம் கற்பிப்போம்.

No comments:
Post a Comment